முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 பந்துகள் தொடரில் முதல் சதம் அடித்த இங்கிலாந்து வீரர்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
peenicks-team-2022-08--11

Source: provided

லண்டனில் 100 பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பர்மிங்காம் பீனிக்ஸ்-சதர்ன் பிரேவ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சதர்ன் பிரேவ் அணி களமிறங்கியது. அந்த அணி 85 பந்துகளில் 123 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக இங்கிலாந்தை சேர்ந்த இளம் வீரர் வில் ஸ்மீத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 50 பந்துகளை சந்தித்து 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடங்கும். இந்த சதத்தின் மூலம் இந்த தொடரில் அவர் சாதனை படைத்துள்ளார். 100 பந்துகள் போட்டியில் யாரும் சதம் அடித்தது இல்லை. முதல் முறையாக இளம் வீரரான வில் ஸ்மீத் இந்த தொடரில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

_______________

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்:

இடம்பெறுவாரா தமிழக வீரர்

இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் காயம் அடைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது.மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது. அவரின் காயத்தின் அளவு தெரியவில்லை. ஆனால் அவருக்கு உடற்தகுதியில் தொடர்ந்து சிக்கல்கள் உள்ளன. 

பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. ஐபிஎல் 2022-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் முதல் ஆட்டத்தில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் கையில் ஏற்பட்ட காயத்தால் விலகினார். விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

______________

உலக பேட்மிண்டன் போட்டி: 

கடினமான பிரிவில் பி.வி.சிந்து

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளார்.

நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் அவர் ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார். இந்த தடையை சிந்து கடந்தால் 3-வது சுற்றில் சூப்பர் பார்மில் உள்ள அன் சி- யங்குடன் (தென்கொரியா) மோத வேண்டி வரலாம். அன் சி- யங்குக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் சிந்து தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

___________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து