முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு : முதல்வர் ஸ்டாலின் விருது வழங்குகிறார் - ஸ்ரீவில்லி., குடியாத்தம், தென்காசி நகராட்சிக்கும் விருது

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சேலம் மாநகராட்சிக்கு, சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டுகிறார். 

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடந்த வாரம் சேலம் வந்த ஆய்வுக் குழுவினர் மாநகராட்சியின் பொறியியல் பிரிவு, வருவாய் பிரிவு, சுகாதார பிரிவு மற்றும் நகரமைப்பு போன்றவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நுண் உயிரி உரம் தயாரிப்பு மையம் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டதில், தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வரும் 15-ம் தேதி சென்னையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் சிறப்பு நிதியாக ரூ. 25 லட்சத்தை வழங்குகிறார். சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆகியோர் இதனை பெறவுள்ளனர். 

இதேபோல், நடப்பாண்டு சிறந்த நகராட்சிக்கான முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரூ. 15 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்த குடியாத்தத்திற்கு ரூ. 10 லட்சமும், மூன்றாம் இடம் பிடித்த தென்காசிக்கு ரூ. 5 லட்சமும் வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து