முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவுக்கு மீண்டும் கொரோனா: விரைவில் நலம் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் சகோதரி மற்றும் கட்சி பொது செயலாளரான பிரியங்காகாந்திக்கு கடந்த 10-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு நெறிமுறைகளின்படி அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் சோனியா காந்திக்கு, கடந்த 3 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய விழைகிறேன். விரைவில், மீண்டும் வழக்கம்போல தனது பணிகளில் ஈடுபடுவார் என்று நம்புகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து