முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தினகரன் தலைமையில் நாளை அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
TTV 2022-08-10

Source: provided

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை  (15-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை வகிக்கிறார்.  இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

பொதுக்குழுவில் பங்கேற்கும் டி.டி.வி.தினகரனுக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் பிரச்சினையை மையமாக வைத்து முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனால் எப்போதும் இல்லாத வகையில் அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து