முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேலோ இந்தியா யு-16 மகளிர் ஹாக்கி லீக் போட்டி ஆகஸ்ட் 16-ம் தேதி தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Women s-Hockey 2022-08-14

Source: provided

புதுடெல்லி : கேலோ இந்தியா 16 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஹாக்கி லீக் டெல்லியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி யு -16 மகளிர் ஹாக்கி லீக் முதல் கட்ட போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் நாடு முழுவதும் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன.டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெறுகிறது . இந்த ஆண்டின் தொடக்கத்தில், லக்னோவில் மூன்று கட்டங்களாக கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக் (யு -21) 21 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து