முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகா எல்லையில் வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      இந்தியா
Vaga 2022 08 14

Source: provided

 சண்டிகர்  வாகா எல்லையில் இந்திய வீரர்கள் வீறுநடை போட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாடி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த எல்லை பகுதியில் இரு நாடுகளில் படைகளும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமாகும்.

இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் தேசியக்கொடியை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும். இந்நிலையில், இந்திய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகழித்தனர். இந்த நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீறுநடை போட்டுச் சென்றனர்.

இந்தியா சுதந்திரமடைந்ததன் 75-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து உற்சாகமடைந்தனர். பாகிஸ்தானின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து