முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும் - சீமான்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      சினிமா
GV-2-Seaman 2022-08-15

Source: provided

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் விஜே கோபிநாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19 இல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக ஜீவி-2 உருவாகி உள்ளது. நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பிராமையா, சீனுராமசாமி ஆகியோருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சீமான், விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்குக் கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்குப் பாராமுகம் காட்டுகின்றன. சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும். அந்த நாளும் வரத்தான் போகிறது என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து