முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈமோஜி விமர்சனம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      சினிமா
Emoji-review 2022-08-15

Source: provided

மஹத் ராகவேந்திரா, தீபிகா சதீஷ், மானஸா செளத்ரி ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ள இணைய தொடர் எமோஜி. கதை, பிரார்த்தனா எனும் பெண்ணைக் காதலித்து, தீக்‌ஷாவைக் கல்யாணம் செய்யும் ஆதவ், விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறான். பிரார்த்தனாவுடன் எப்படி காதல் மலர்கிறது, ஏன் தீக்‌ஷாவைக் கல்யாணம் செய்கிறான், மகிழ்ச்சியாக வாழும்போதே ஏன் விவாகரத்துச் செய்கிறான் என்பதே இத்தொடரின் கதை. தொடரின் முதல் மூன்று அத்தியாயங்களில் இளமைத் துள்ளலும், இன்றைய தலைமுறையின் மனப்போக்கையும் பிரதானப்படுத்தியுள்ளனர். அடுத்த நான்கு அத்தியாயங்களில் படத்தின் ஜானரும் எமோஷ்னல் ஜர்னியாக மாறுகிறது. நான்காவது அத்தியாயத்தில் இருந்து தொடரைத் தாங்கும் தூணாகத் தன் நடிப்பால் வலு சேர்த்துள்ளார். வீட்டுக்குத் தெரியாமல் காதல் திருமணங்கள் செய்து கொண்டிருந்த இளைஞர்களும் யுவதிகளும் இப்போது வீட்டுக்குத் தெரியாமல் விவாகரத்து வாங்குகிறார்கள் என்பது உட்பட பல அதிர்ச்சிகளை முந்தைய தலைமுறைக்குத் தரும் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சென் எஸ்.ரங்கசாமி. நாம் நமது என்று சிந்திக்காமல் நான் எனது என்று சிந்திக்கும் இந்தத் தலைமுறையை அவர்கள் போக்கிலேயே போய் அம்பலப்படுத்தியிருக்கிறார். வயது வந்தோருக்கான தொடர் எனும் அறிவிப்போடு ஒளிபரப்பாகும் இத்தொடர் இளைஞர்களை ஈர்க்கும் காதல் மற்றும் காமக்காட்சிகளுடன் சிந்திக்கவும் வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து