முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினவிழா: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி மரியாதை

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi-2 2022-08-15

Source: provided

புதுடெல்லி : சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடி வெள்ளை நிற தலைப்பாகை அணிந்திருந்தார். அதில் காவி நிறம் மற்றும் பச்சை நிறக் கோடுகள் இருந்தன. பார்ப்பதற்கு தேசியக் கொடி உணர்வைத் தரும் வகையில் அந்த தலைப்பாகை அமைந்துள்ளது. வெளிர் நீல நிற கோட் அணிந்திருந்தார்.

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செங்கோட்டைக்கு வருகை தந்தார். அங்கு அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அவரை பாதுகாப்புப் படை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுச் சென்றார். பின்னர் அவர் விழா மேடைக்குச் சென்றார். பிரதமர் மோடி 9வது முறையாக சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றுகிறார். பின்னர் நாட்டு மக்களுக்காக அவர் உரையாற்றினார்.

சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். சுதந்திர தின விழாவை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து