முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் நடக்கவிருந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ரத்து செய்த பிபா

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
World-Cup 2022-08-12

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நடக்கவிருந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது பிபா.

ரசிகர்கள் அதிர்ச்சி...

17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை இப்போட்டிகள் மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பெண்கள் உலகக்கோப்பை போட்டியை இந்தியா நடத்தும் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததுடன், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா நேற்று தற்காலிகமாக ரத்து செய்தது. ஃபிஃபா-வின் இந்த நடவடிக்கை இந்திய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதவியில் 12 ஆண்டு...

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பதவி காலம் 4 ஆண்டுகளாகும். ஒரு நபர் 3 முறை தலைவர் பதவியில் இருக்கலாம். அந்த வகையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக பிரபுல் படேல் கடந்த 12 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இவரது பதவி காலம் கடந்த 2020 டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. ஆனால், தனது தலைமையிலான நிர்வாக குழுவின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டுமென பிரபுல் படேல் 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.

புதிய உறுப்பினர்கள்... 

இதன் காரணமாக வழக்கை காரணம் காட்டி புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். 2020-ம் ஆண்டே அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தலை நடத்தாமல், பதவிகாலம் முடிந்தும் பிரபுல் படேல் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அவரது தலைமையிலான நிர்வாக குழுவும் செயல்பட்டு வந்தது.

சுப்ரீம் கோர்ட் அதிரடி...

இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் பார்வைக்கு சென்றது. இதையடுத்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்டு, பதவி காலம் முடிந்தும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்த பிரபுல் படேலை பதவியில் இருந்து நீக்கியது. அவரை நிர்வாக குழுவில் இருந்து நீக்கியதுடன் அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக கலைத்தது.

இந்தியாவில் நடத்த...

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த சுப்ரீம் கோர்ட்டு புதிதாக தேர்தலை நடத்து ஏதுவாக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. மேலும், மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை கட்டாயம் இந்தியாவில் நடத்த வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தற்காலிக ரத்து...

இவ்வாறான குழப்பங்களுக்கு மத்தியில், மூன்றாம் நபர் தலையீடு உள்ளதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியும் தற்காலிகமாக ரத்து செய்தது. உலகக்கோப்பை போட்டிகள் வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து