முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      தமிழகம்
chennai-high-court---------2022-08-18

Source: provided

சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னையில் காவலர் குடியிருப்பில் வசித்த போலீஸ்காரரான மாணிக்கவேல் என்பவர், வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், வீட்டை காலி செய்யும்படி கடந்த 2014-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும், வீட்டை காலி செய்ய உத்தரவிட்டது. ஆனால், அண்மையில்தான் அவர் வீட்டை காலி செய்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 75-ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது என்றும், துப்பாக்கி பிடிக்க வேண்டிய கைகளில் சப்பாத்தி சுடும் அவலம் உள்ளது என்றும் ஐகோர்ட்டு வேதனை தெரிவித்தது.

மேலும் இந்த வழக்கில் டி.ஜி.பி.யை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். ஆர்டர்லி முறையை ஒழிக்க, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வருகிற 18-ந்தேதிக்குள் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்டர்லி முறை இல்லை என அனைத்து அதிகாரிகள் சார்பில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவாதம் அளித்தார். இதைடுத்து ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து