முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      இந்தியா
train---2022-08-18

Source: provided

சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த நீளமான ரயில், ரயில்நிலையம் ஒன்றை கடந்துசெல்வதற்கு மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டு விழாவை ஒட்டி, 'சூப்பர் வாசுகி' எனும் ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது தென்கிழக்கு ரயில்வே. இந்தியாவின் மிகப் பெரிய சரக்கு ரயிலான இந்த சூப்பர் வாசுகி, சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிலிருந்து ராஜ்நந்த் கானுக்கு இடையே வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த சரக்கு ரயில் சுமார் 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதில் 295 பெட்டிகள் உள்ள நிலையில், இதன் மூலம் ஒரே நேரத்தில் 25 ஆயிரத்து 962 டன் நிலக்கரியை ஏற்றிச் செல்ல முடியும். இந்த நிலக்கரியைக் கொண்டு ஒரே நாளில் 3,000 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிகப்பெரிய ரயிலை இயக்குவதற்கு ஆறு இன்ஜின்கள் பயன்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீளமான ரயில், ரயில்நிலையத்தை கடப்பதற்கு மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து