முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்: கவர்னர் ரவி

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      தமிழகம்
RN-Ravi 2022-08-19

நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நாகூரில் நேற்று நடந்த ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவர்னர் ஆர்.என். ரவி பேசினார். 

நாகை மாவட்டம், நாகூரில் உள்ள தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் 215 இளங்கலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 55 இளநிலை தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், 25 முதுகலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட 339 மாணவ மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது, 

உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கும் சூழலில், அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம், அடுத்து வரும் 25 ஆண்டுகளில் இதை விட வேகமாக உழைக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.  அதற்கு மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். 

மேலும், பொருளாதாரத்தில் மீன்வளத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. மகளிர் மேம்பாடு, தொழிற்துறை , உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து