முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு பாசி மணி அணிவித்த நரிக்குறவ மக்கள்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Annamalai 2022-08-19

Source: provided

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அண்ணாமலைக்கு நரிக்குறவ மக்கள் பாசி மணி அணிவித்தனர். 

புதுக்கோட்டை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

புதுக்கோட்டை என்றால் நாட்டுப்பற்று மிகுந்த ஊர். இங்கிருந்து தான் சத்தியமூர்த்தி, டாக்டர் முத்துலெட்சுமி போன்றவர்கள் வந்துள்ளனர். புதுக்கோட்டை தமிழகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி முன்னேற அனைத்து நடவடிக்கையும் நாங்கள் மேற்கொள்வோம். தி.மு.க. ஆட்சியில் சாதி, மத பேதம் எல்லா இடத்திலும் உள்ளது. 

நரிக்குறவ பெண்ணான அஷ்வினிக்கு வீடு கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த செக் செல்லாமல் போய் விட்டது. நரிக்குறவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பொதுக்கூட்ட மேடையில் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கும் போது நரிக்குறவ மக்கள் அவருக்கு பாசி மணி அணிவித்தனர். அப்போது, நரிக் குறவர் சமுதாயத்தை மத்திய அரசு விரைவில் எஸ்.டி பிரிவில் சேர்க்கவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து