முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2022      வர்த்தகம்
Gold 2021 11 23

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680-க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.58-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 24-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்பட்டது. மறுநாள் 25-ந்தேதி அது அதிரடியாக உயர்ந்து ரூ.38,800 ஆனது. 26-ந்தேதி தங்கம் விலை ரூ.38,560 ஆக குறைந்தது. 27-ந்தேதி மீண்டும் குறைந்து ரூ.38,440-க்கு விற்கப்பட்டது. 29-ந்தேதி மீண்டும் குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையானது. 30-ம் தேதி ரூ.38,320 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரூ.38,032 ஆக குறைந்தது.

இந்த நிலையில் தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனையானு. கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.37,880-க்கு விற்றது. அதன் பிறகு நேற்று பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,754-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710-க்கு விற்பனையானது.

இதேபோல் வெள்ளி விலையும் நேற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.58-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.58,000-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து