முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்து மீது உமிழ்நீர் பயன்படுத்த தடை உள்ளிட்ட ஐ.சி.சி.யின் புதிய விதிமுறைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2022      விளையாட்டு
ICC 2022 09 20

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

ஒருநாள் போட்டியிலும்...

டி20 கிரிக்கெட்டில் ஓவர்கள் வீச ஓர் அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் மீதமுள்ள ஓவர்களில் வட்டத்துக்குள் கூடுதலாக ஒரு வீரரை நிறுத்த வேண்டும். இந்த நடைமுறை ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடரவுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்த விதிமுறை அமலுக்கு வரும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள்:

* பந்துவீச்சாளர் பந்து வீச ஓடி வரும்போது ஃபீல்டர் வேண்டுமென்றே நகர்ந்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும். 

* பந்துவீச்சாளர் பந்துவீசும் முன்பு, நடுவர் அருகே உள்ள பேட்டர் கிரீஸை விட்டு நகர்ந்தால் அவரை பந்துவீச்சாளர் ஆட்டமிழக்கச் செய்யலாம். அதுபோன்று ஆட்டமிழக்கச் செய்வது இனிமேல் ரன் அவுட் என அழைக்கப்படும். 

* கொரோனாவின் பரவலைத் தடுக்க எச்சிலைக் கொண்டு பந்துகளைப் பளபளப்பாக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. 

* பந்துவீசும் முன்பு ஒரு பேட்டர் முன்னேறி வந்து அடிக்க வருவதைக் கவனித்து விட்டால், அந்த பேட்டரை பந்துவீச்சாளர் இதற்கு முன்பு ரன் அவுட் செய்ய முடியும். இனிமேல் அப்படிச் செய்ய முடியாது. பந்துவீசும் நடவடிக்கையை முழுவதுமாக முடிக்காமல் பந்தை பேட்டர் பக்கம் த்ரோ செய்யக் கூடாது. 

இந்த விதிமுறைகளைக் கடந்த மார்ச் மாதம், எம்.சி.சி. அமைப்பு பரிந்துரை செய்திருந்தது. தற்போதை அதனை கங்குலி தலைமையிலான ஐ.சி.சி. குழு அங்கீகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து