முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் 207 ரன்கள் போதும்... சர்வதேச கிரிக்கெட்டில் 2 புதிய சாதனைகளை நோக்கி கோலி..!

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2022      விளையாட்டு
Virat-Kohli 2022-08-27

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் விராட் கோலி, இன்னும் 207 ரன்கள் கடந்தால் 2 புதிய சாதனையை படைப்பார்.

மூன்றாவது இடத்தில்... 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்டருமான விராட் கோலி, இதுவரை 468 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24,002 ரன்கள் குவித்துள்ளார். இதில், 71 சதங்களும், 124 அரைசதங்களும் அடங்கும். இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார் கோலி. முதல் இடத்தில் 34,357 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கரும், இரண்டாவது இடத்தில் 24,208 ரன்களுடன் ராகுல் டிராவிட்டும் உள்ளனர்.

2-வது இடத்திற்கு...

இந்நிலையில், இன்று தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில், கோலி தனது அதிரடியை தொடரும் பட்சத்தில் 207 ரன்களை எளிதாக கடந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலிலும் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறிவிடுவார்.

தனது 71-வது சதம்...

முன்னதாக, கடந்த 1,000 நாள்களுக்கு மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வந்த விராட் கோலி ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 122 ரன்கள் குவித்து சர்வதேச அரங்கில் 71 சதத்தை எட்டினார். ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு அரைசதம், ஒரு சதத்துடன் மொத்தம் 276 ரன்கள் குவித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் கோலி.

சர்வதேச அரங்கில் அதிக ரன்கள்

இடம்  வீரர்கள் பெயர் ரன்கள்

  1. சச்சின் 34,357.
  2. குமார் சங்ககரா 28,016.
  3. ரிக்கி பாண்டிங் 27,483.
  4. ஜெயவர்தனே 25,957.
  5. ஜேக் காலிஸ் 25,534.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து