முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் 1,725 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2022      இந்தியா
Mumbai 2022-09-21

Source: provided

மும்பை : மும்பையில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மும்பை நவசேவா துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் ஹெராயின் கடத்த இருப்பதாக டெல்லி போலீசின் சிறப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் மும்பை நவசேவா துறைமுகத்துக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது கண்டெய்னரில் ஹெராயின் கடத்தப்பட இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து கண்டெய்னரில் இருந்த ஹெராயினை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 22 ஆயிரம் கிலோ ஹெராயின் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.1,725 கோடியாகும்.

சமீப காலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஹெராயின் பறிமுதல் செய்யப்படவில்லை. வழக்கமாக குஜராத் மாநிலத்தில்தான் போதை பொருள் பிடிபடுவது வழக்கம். தற்போது மும்பையில் ரூ.1,725 கோடியில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசாரும், போதை பொருள் தடுப்பு அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து