முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு ஆவினில் ரூ.200 கோடி இனிப்பு வகைகளை விற்க இலக்கு அமைச்சர் நாசர் பேட்டி

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      தமிழகம்
Nasar 2022-09-22

Source: provided

சென்னை: தீபாவளிக்கு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்பு வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.,  திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டில் தீபாவளி பண்டிகை ஆவின் இனிப்புகள் விற்பனை ரூ. 81 கோடியாக உயர்த்தியது. வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, ஆவின் நிறுவனத்தின் இனிப்புகளை ரூ.200 கோடிக்கு விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், துபை போன்ற பல்வேறு நாடுகளுக்கும் இனிப்புகளை விற்பனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்தாண்டும் அரசு அதிகாரிகள் ஆவின் நிறுவன இனிப்புகளை வாங்க உத்தரவிடப்பட்டு பொருள்கள் விற்பனை நடந்து வருகிறது என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து