முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்தில் 3-வது டி-20 போட்டி: டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 20 பேர் காயம்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      விளையாட்டு
Hydrabat-T-20 2022-09-22

Source: provided

ஐதராபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா ஐதராபாத்தில் நடைபெறவுள்ள 3-வது டி-20 போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 5 ரசிகைகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

வரும் 25-ம் தேதி...

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஐதராபாத்தில் வருகிற 25ம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான் டிக்கெட் விற்பனை ஜிம்கானா மைதானத்தில் நடைபெற்றது. ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் 3 ஆயிரம் டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனைக்கு உள்ளதாக கூறியது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டி போட்டனர். டிக்கெட்டுகளை வாங்க ஆயிரகணக்கன் ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

போலீசார் தடியடி...

இதையடுத்து ரசிகர்களை லேசான தடியடி நடத்தி போலீசார் கலைய செய்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் காயமடைந்தனர், மேலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் 5 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். போலீசாரும் காயம் அடைந்தனர்.காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். டிக்கெட் விற்பனையை சீராக தொடர, டிக்கெட் கவுன்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

குற்றச்சாட்டு...

போலீசார் நடத்திய தடியடியில் ரசிகை ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் ரசிகர் இல்லை, மைதான ஊழியர் (ரஞ்சிதா) என்றும், அவர் தற்போது இறக்கவில்லை, பத்திரமாக உள்ளார் என்று செய்தியாளர் ஒருவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 

ரசிகர்கள் குற்றச்சாட்டு...

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 39,000 பேர் அமர முடியும்.இந்த டிக்கெட்டுகள் முதலில் பேடிம் இல் விற்பனை செய்யப்படும் என் ஐதராபாத் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 39,000 டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்படவில்லை என்றும், 10-15 டிக்கெட்டுகள் மட்டுமேவிற்பனைச் செய்யப்பட்டதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.மேலும், ஜிம்கானா கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை முதல் டிக்கெட்டுகள் கவுன்டர்களில் விற்கப்படும் எனப் பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டது.

பெரும் கூட்ட நெரிசல்...

புதன்கிழமை இரவு முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு காத்திருந்தனர். ஆனால், வியாழன் அன்று டிக்கெட் எடுக்க விரைந்த ரசிகர்களை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உண்மையில், ஆரம்பத்திலிருந்தே இந்த டிக்கெட் விற்பனையில் குழப்பம் நிலவி வருகிறது. அனைத்து டிக்கெட்டுகளும் முதலில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. அதன்பின், ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால். கவுன்டர்களில் 3 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து