Idhayam Matrimony

ரெண்டகம் விமர்சனம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      சினிமா
Rendakam-Review 2022-09-24

Source: provided

அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ரெண்டகம். பெலினி டிபி இயக்கியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியாகிறது. மும்பையில் தாதாவாக இருந்தவர் அரவிந்த் சாமி. ஒரு விபத்தில் தான் ஒரு தாதா என்ற பழைய நினைவுகளை மறந்து விடுகிறார். இவர் தாதாவாக இருக்கும் பொழுது மாற்றிவிட வைத்திருந்த தங்கத்தை தவறவிட்டதால் அதனை மீட்டெடுக்க ஒரு குழு திட்டமிட்டு வருகிறது. இதற்காக குஞ்சக்கோ போபனை அனுப்பி வைக்கின்றனர். போபன் அரவிந்த் சாமியிடம் நண்பனாக பழகி, நினைவை இழந்த மங்களூருக்கு அவரை அழைத்து செல்கிறார். ஆனால் அங்கு வேறொன்று நடக்கிறது.இறுதியில் டேவிட்டிடம் இருந்து பழைய விஷயங்களை பெற்றாரா? இல்லையா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் கிளைமாக்ஸ். டேவிட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அரவிந்த் சாமி, பழைய நினைவுகளை மறந்த  கதாப்பாத்திரத்தில் எதார்த்தமாக நடித்து பாராட்டுக்களை பெறுகிறார். குஞ்சக்கோ போபன் அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரைச் சுற்றியே கதை நகர்கிறது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ் நடித்திருக்கிறார்கள். காஷிப் இசையும் கவுதம் ஷங்கர் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில் ரெண்டகம் அருமை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து