முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் கரையை கடந்தது : சக்தி வாய்ந்த பியோனா புயல் மின்சாரமின்றி மக்கள் தவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      உலகம்
Fiona 2022-09-25

Source: provided

ஒட்டாவா: கனடாவின் கிழக்கு பகுதிகளை பியோனா என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. 

கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பியோனா புயல் கனடாவின் கிழக்கு பகுதி நோவா ஸ்கோடியாவில் நேற்று முன்தினம் அதிகாலை கரையைக் கடந்தது. கனடாவின் கிழக்கு பகுதிகளில் மூன்று மாகாணங்களில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் மழை மற்றும் காற்று வீசியது. அட்லாண்டிக் கடல் பகுதி மாகாணங்களான நோவா ஸ்கோடியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு, நியூ பவுண்ட்லேண்ட், நியூ பிரன்சுவிக் மற்றும் கியூபெக் ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. கடுமையான வெள்ளத்தால் சில வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. 5,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் சூறாவளி காற்று தொடர்வதால், மின்சாரம் சீரமைக்க பல நாட்கள் ஆகலாம் என மின்வாரிய நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. புயல் பாதித்த பகுதிகளுக்கு உதவ ராணுவம் அனுப்பப்படும் என்றும் நிலைமை மோசமாக இருப்பதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து