முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முடிவு: ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் : கவர்னரின் ஒப்புதலுக்கு பிறகு அமலாகும்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      தமிழகம்
CM-2 2022--09-26

Source: provided

சென்னை : முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அவசர தடைச்சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்கு பிறகு அமலாகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறுது. இந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள சட்ட மசோதாக்களுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல் முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களின் நிலை, அதுதொடர்பான விவரங்கள் குறித்தும், கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது, புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி மற்றும் சலுகைகள் வழங்குவது குறித்தும் முதல்வர் தலைமையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து