முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா துறை பணிகளில் மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      இந்தியா
Ragasamy 2022--09-26

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் சுற்றுலா துறை பணிகளில் மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதமாகிறது என்று முதல்வர் ரங்கசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ‘சுற்றுலா ஒரு மறு சிந்தனை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடத்தப்பட்டது. கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த கருத்தரங்கை முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். எம்.பி செல்வகணபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசியது: “அரசுக்கு பெருமளவு வருவாயை சுற்றுலா ஈட்டித் தருகிறது. வாரம் முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவழைக்க திட்டங்கள் தீட்ட வேண்டும். புதுச்சேரியில் பல அழகிய கடற்கரை இருப்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. மூர்த்திகுப்பம், மணல்பட்டு பகுதியில் கடல்நீர் அழகாக காட்சியளிக்கும். இதை மேம்படுத்த வேண்டும். மணப்பட்டு பகுதியில் 150 ஏக்கர் நிலம் உள்ளது. இதை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்துதர வேண்டும். இப்போது அதிகமாக விடுதிகள் தேவைப்படுகிறது. 2 ஆயிரம் அறைகள் உடனடி தேவை என்ற நிலையில் புதுவை உள்ளது. இதை கட்ட தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்.

அதே நேரத்தில் அனுமதி உடனடியாக கிடைப்பதில்லை - இழுத்தடிப்பதாகவும் தொழில்தொடங்குவோர் கூறுகின்றனர். நல்லவாடு கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் விடுதிகள் கட்டுவதற்கு 3, 4 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள். இன்றுவரை அவர்களால் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியவில்லை. விரைவான வளர்ச்சி பெறுவதற்கு அனுமதி வழங்குவது அவசியமான ஒன்று. மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா என்ற நிலை உள்ளது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மாநில வளர்ச்சி பெற சிலவற்றை தளர்த்தித்தர வேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து