முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியை நோக்கி வந்த சிறுகோள் மீது மோதி திசை திரும்பியது விண்கலம் நாசாவின் சோதனை வெற்றி

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      உலகம்
Nasa 2022-09-27

Source: provided

வாஷிங்டன்: பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சிறு கோள்களின் சுற்றுப் பாதையானது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 3 கோடி மைல்களுக்குள் வர சாத்திய கூறுகள் உள்ளது. அவற்றை பூமிக்கு அருகே கொண்டு வரமுடியும். பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில் நாசா புதிய திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்திற்கு டார்ட் என்று பெயரிடப்பட்டு உள்ளது. சூரியனை சுற்றி வரும் சிறிய கோள்கள் பூமியை தாக்குவதில் இருந்து தடுக்க இது ஒரு முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த திட்டம் மூலம் பூமியை நோக்கி வரும் டிமார்போஸ் என்னும் சிறியகோள் மீது விண்கலனை மோதவிடுவதற்கான சோதனை முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். டிமார் போஸ் விண்கலம் 525 அடி சுற்றளவு கொண்டது. வினாடிக்கு 6.6 கிலோமீட்டர் வேகத்தில் சிறுகோளை சுற்றி வருகிறது. இந்த சோதனை திட்டம் நேற்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4.44மணிக்கு சிறுகோள் மீது வினாடிக்கு 22,500 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று நாசா விண்கலம் மோதியது. இந்த மோதலின் போது சிறுகோள் அதன் சுற்றுப் பாதையில் இருந்து திசை திரும்பியது. வெற்றிகரமாக நிகழ்த்தபட்ட இந்த சோதனையால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். உலக அளவில் முதல் முறைாக இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த அரிய நிகழ்வை செயற்கைகோளில் உள்ள கேமிரா மூலம் நாசா நேரடியாக ஒளிபரப்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து