முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
Anbilmahesh 2022-09-27

Source: provided

சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை தொடர்ந்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு முதலில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து மீண்டும் அவருக்கு பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒரு சில தினங்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் இறுதியில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து