முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
Weather-Center 2021 06-30

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தி.மலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (செப். 29:) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப். 30 முதல் அக். 1: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.     

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நன்னிலம் 11 செ.மீ., கும்பகோணம் 10 செ.மீ., திருவாரூர், திருவிடைமருதூர் தலா 7 செ.மீ., வேலூர், பாடலூரில் 6 செ.மீ., லப்பைக்குடிக்காடு, வேளாங்கண்ணியில் 5 செ.மீ., அயனாவரம், தஞ்சையில் 4 செ.மீ., பெரம்பூர், திருக்குவளையில் தலா 3 செ.மீ., நாட்றம்பள்ளி, மன்னார்குடி, காட்பாடி, சென்னையில் தலா 2 செ.மீ., வாணியம்பாடி, அம்பத்தூர், கள்ளக்குறிச்சி, கலசப்பாக்கம், பெரம்பலூரில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து