முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஃப்.ஐ. அமைப்பின் சமூக வலைதள கணக்குகளை முடக்கி மத்திய அரசு உத்தரவு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2022      இந்தியா
PFI 2022-09-28

Source: provided

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் அனைத்து சமூக வலைதள கணக்குகளையும் முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.popularfrontindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து