முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஃ.ப்ஐ. அமைப்புக்குத் தடை: டெல்லியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2022      இந்தியா
Delhi-Police 2022 09 28

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைநகரான டெல்லியில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அமைப்புகளுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃ.ப்ஐ.) உள்பட அதனோடு தொடர்புடைய 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியிலுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.  மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, ட்ரோன்கள் மூலம் கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  கடந்த 10 நாள்களுக்கு முன்பு டெல்லி ஜாமியா நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து