முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கேடட் 2022 செஸ் போட்டி: இந்திய சிறுவர்களுக்கு பட்டம்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2022      விளையாட்டு
Chess 2022-09-28

Source: provided

உலக கேடட் 2022 செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சார்வி அனில்குமார், சுபி குப்தா ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்கள். ஜார்ஜியாவில் நடைபெற்ற 8 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் செஸ் போட்டியில் கர்நாடகத்தைச் சேர்ந்த 8 வயது சார்வி, 9.5 புள்ளிகளுடன் டை பிரேக்கரில் இங்கிலாந்தைச் சேர்ந்த போதனாவை வீழ்த்தி தங்கம் வென்றார். ஓபன் பிரிவுக்கான யு-8 போட்டியில் இந்தியாவின் சஃபின் வெண்கலம் வென்றார். 

மகளிர் யு-12 போட்டியில் இந்தியாவின் சுபி குப்தா (உத்தரப் பிரதேசம்) தங்கம் வென்றார். 8 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இதுவரை நான்கு இந்தியர்கள் தங்கம் வென்றுள்ளார்கள். இதற்கு முன்பு ஓபன் பிரிவில் இளம்பரிதி, பிரணவ் ஆனந்த் தங்கம் வென்றார்கள். 

_____________

ஜடேஜாவுக்கு மாற்றான ஆல்ரவுண்டர்:

முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அஜய் ஜடேஜா கூறியதாவது., ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் ஆடவில்லை. அவரது இடத்தில் அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் அதை மிகவும் சரியாக பயன்படுத்தி கொண்டார். ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் வரிசைக்கு மாற்றாக அக்‌ஷர் படேல் இருக்கிறார். 

அவரை போன்று அக்‌ஷர் படேல் பேட்டிங் செய்கிறார். பந்து வீசுகிறார். பீல்டிங் மட்டும் இன்னும் பொருத்தமாக அமையவில்லை. உலகக்கோப்பை போட்டியில் அக்‌ஷர் படேலால் தாக்கத்தை ஏற்படுத்த இயலும். அணிக்கு மீண்டும் திரும்பும் போது ரவீந்திர ஜடேஜா நல்ல நிலையில் இருப்பார். இவ்வாறு அஜய் ஜடேஜா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அக்‌ஷர் படேல் 8 விக்கெட் கைப்பற்றி (3 ஆட்டம்) தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________

சூர்யகுமார் யாதவ் திருப்புமுனையே 

கேகேஆர்-ஆல் தான்: ரிக்கி பாண்டிங்

32 வயதான சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 1266 ரன்கள் எடுத்துள்ளார் அவர். இதில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 926 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 682 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில உள்ளார்.

இந்நிலையில், அவரது கிரிக்கெட் கரியரில் கேகேஆர் அணியில் விளையாடியபோது தான் திருப்புமுனை தொடங்கியதாக தெரிவித்துள்ளார் ரிக்கி பாண்டிங். “நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது அவருக்கு 18-19 வயதுதான் இருக்கும். மிகவும் இளம் வீரர். அவர் எங்கள் அணியில் இருந்தபோதும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் அந்த அணியில் இருந்து விலகிய பிறகு அவரை கொல்கத்தா அணி வாங்கி இருந்தது. அங்குதான் அவருக்கு திருப்புமுனை கிடைத்தது. மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அவர் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் தேடலை செழிக்க செய்தார்” என பாண்டிங் தெரிவித்துள்ளார்.

_______________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து