முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டி-20 கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா..!

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2022      விளையாட்டு
T-20

Source: provided

திருவனந்தபுரம்: முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

பந்துவீச்சு தேர்வு...

இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா பின்னர் ஒரு வழியாக 100 ரன்னை கடந்தது. 20 ஓவர் முடிவில 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 41 ரன்கள் சேர்த்தார்.

107 ரன்கள் இலக்கு...

இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தீபக் சாகர், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி 3 ரன்னில் நடையை கட்டினார்.

இந்தியா முன்னிலை...

அதன்பின்னர் கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இருவரும், கடைசி வரை நிலைத்து நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களும் சேர்க்க, இந்தியா 20 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்ததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. 

BOX - 1

விக்கெட் வீழ்த்தியதால் வெற்றி

வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது., தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ஆரம்பம் முதலே வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாகர் விக்கெட்களை எடுக்க ஆரம்பித்து விட்டனர். பவர்பிளேயின் போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியது. விக்கெட் கடினமாக இருந்தது.

இதுபோன்ற விளையாட்டை விளையாடுவதில் நீங்கள் நிறைய கற்றுக் கொள்கிறீர்கள். ஆடுகளம் 20 ஓவர்களுக்கும் உதவியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக ஆடுகளம் இருக்கும் போது எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கு இந்த போட்டி சரியான காட்சியாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து