முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா முழுவதும் 2023 இறுதிக்குள் 5ஜி சேவை: முகேஷ் அம்பானி உறுதி

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      வர்த்தகம்
Mukesh-Ambani 2022-10-01

இந்தியா முழுவதும் டிசம்பர் 2023க்குள் 5ஜி சேவை வழங்கப்படும் என்று முகேஷ் அம்பானி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

முன்னதாக, மாநாட்டில் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி உரையாற்றினார். அப்போது அவர், "தனது தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 2023க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும். ஜியோ இந்த மாதத்திற்குள் 5G சேவைகளை வழங்குவதற்கு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், ஜியோ மலிவு விலையில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும். டிசம்பர் 2023க்குள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் 5ஜி சேவை உள்ளடக்கும்" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து