முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50 ஆண்டு வட்டியில்லா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.3500 கோடி கடன் வழங்கியது மத்திய அரசு : டெல்லியில் தமிழக நிதியமைச்சர் பேட்டி

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      இந்தியா
PTR 2022--10-01

Source: provided

புதுடெல்லி : தமிழகத்துக்கு 50 ஆண்டு வட்டியில்லா திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பிறகு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். 

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. டெல்லியில் நார்த் ப்ளாக்கில் உள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பிறகு நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பு பற்றி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜிஎஸ்டி கவுன்சில் விதிகள்படி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 3 மாதத்துக்கு ஒருமுறை நடத்தப்பட்ட வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் மதுரையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் முடிந்தும் இந்த கூட்டம் நடக்கவில்லை. இந்த கூட்டத்தை மதுரையில் நடத்துவது பற்றி விவாதித்தேன். இன்னும் தேதி குறிப்பிடவில்லை. ஆனாலும் விரைவில் அடுத்த கூட்டம் மதுரையில் உறுதியாக நடக்கும்.

மேலும் தமிழ்நாட்டின் பல திட்டங்கள், கணக்குகள் பற்றி நேற்று முன்தினம் அதிகாரிகளிடமும், நேற்று மத்திய நிதி அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட பணிக்காக ஜைக்கா, ஏடிபி, எஐபிஐ நிறுவனங்களில் இருந்து பெறக்கூடிய கடனுக்கான அடிப்படை பத்திரங்கள் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இதனை அவசரமாக ஒப்புதல் அளிக்க கோரினோம். இந்த விஷயத்தில் சில விளக்கங்களை கேட்டனர். அதனை 2 நாட்களுக்கு முன்பு கொடுத்து இருந்தோம். தற்போது இந்த மாத இறுதிக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம் 2ம் கட்ட திட்டத்துக்கான கடனை விரைவாக பெற முடியும்.

அதோடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு லட்சம் கோடி வரை 50 ஆண்டு வட்டியில்லா கடன் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகத்தின் பல துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் செய்யப்பட்டு இருந்தது. இதுவரைக்கும் நிதி எதுவும் வராத நிலையில் தற்போது 3,500 கோடி ரூபாய் வட்டியில்லா கடனை விடுவித்துள்ளனர். அதன்படி ஆப்டிக்கல் பைபர் கேபிள் திட்டத்துக்கு ரூ.194 கோடி, ஊரக நெடுஞ்சாலை துறைக்கு ரூ.3,263 கோடி எனவும் இதுமட்டுமின்றி பிற திட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருமானவரி மற்றும் இபிஎப்ஓ டேட்டாக்கள் கொடுக்கும்படி மத்திய அரசிடம் கேட்டு இருந்தோம். தமிழகத்தில் கடன் தள்ளுபடி, பிற திட்டங்களில் தமிழக மக்கள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை அறிந்து திட்டங்கள் செயல்படுத்த வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் கேட்டு இருந்தோம். இதுபற்றி பட்ஜெட்டிலேயே குறிப்பிட்டு இருந்தேன். வருமான வரித்துறையில் இருந்து கர்நாடகத்துக்கு டேட்டா ரீலிஸ் செய்தனர். அதேபோல் தமிழகத்துக்கும் வருமான வரி மற்றும் இபிஎப்ஓ டேட்டாக்களை வழங்க கேட்டேன். தருவதாக கூறியுள்ளார்.

மதுரையில் நைபர் (national institute of pharmacology and research) திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு இதில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபற்றி கேட்டபோது நைபர் திட்டம் அமலில் இல்லை என்றார். இதனால் நைமர் (National Institute of Medical Equipments research) திட்டத்தில் ஆய்வு மையத்தை மதுரைக்கு ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மதுரையில் ஏய்ம்ஸ் வரும் நிலையில் இது பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து