முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதயத்தை காப்போம் - குறும்பட போட்டியை தொடங்கி வைத்த யுவன்

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      சினிமா
Yuvan 2022-10-01

Source: provided

உலக இதய தினத்தை ஒட்டி இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் ஒரு மாதம் பரப்புரை திட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க ஒரு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்படுகின்றது. முதல் பரிசாக 1,00,000 லட்சம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 50,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 25,000 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை யுவன் சங்கர் ராஜா தொடங்கி வைத்து பேசியுள்ளதாவது, “சிந்தனையை தூண்டிவிடுகின்ற சிறப்பான குறும்படங்களின் மூலம் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக வளர்ந்து வரும் திரைப்படங்களை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன். உங்களின் முழு திறமையை வெளிப்படுத்துமாறு ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க நான் விரும்புகின்றேன். இளம் வயதில் இதய நோய் வராமல் தடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக விழிப்புணர்வுக்காக இந்த செயல்திட்டதை நிஜத்தில் செயல்படுத்த உதவியுள்ள அனைவருக்கும் எனது நன்றி என்றார். இந்த விழாவில் பிரசாந்த் மருத்துவமனை இயக்குனர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா   திரைப்பட ஒளிப்பதிவாளர்  திரு. ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து