முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலஷ்மி சரத்குமார் நடிக்கும் சபரி

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      சினிமா
Varalashmi 2022-10-01

Source: provided

மஹா மூவிஸ் சார்பில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் படம் சபரி. இந்த படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மகரிஷி கொண்டலா வழங்குகிறார். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர நாத் கொண்டலா கூறுகையில், "படத்தின் ஒரு பாடல், க்ளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் முக்கிய காட்சிகளை இந்த 14 நாட்களில் கொடைக்கானலின் அழகான இடங்களில் படமாக்கியுள்ளோம் என்றார். இயக்குனர் அனில் கட்ஸ் பேசுகையில், "படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் பரபரப்பான திருப்பங்களை கொண்டுள்ளது. இதில் வரலக்‌ஷ்மி சரத்குமார் பல கட்டங்களை உள்ளடக்கிய எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னால் இது போன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை என்று கூறினார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கிறது. படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து