முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு தூய்மையான காமராஜ் மாடல் தேவை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      தமிழகம்
GK-Vasan 2022--09-30

Source: provided

சென்னை ; தமிழகத்திற்கு நேர்மையான, எளிமையான, தூய்மையான காமராஜ் மாடல் தேவை என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். 

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 48-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி த.மா.கா. தலைமை அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  ஜி.கே.வாசன் கூறுகையில், காமராஜரின் பொற்கால ஆட்சியின் அடிப்படையிலே, தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. வளமான தமிழகத்திற்கு நேர்மையான, எளிமையான, தூய்மையான காமராஜ் மாடல் தேவை. கிராம வளர்ச்சியை மேம்படுத்துவதில் மெத்தனப்போக்கு தெரிகிறது. கிராமங்களுக்கான நிதியை முறையாக விடுவித்து அதன் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து