முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்ஜீவன் திட்டத்தில் சிறப்பான செயல்பாடு: தமிழகத்திற்கு முதல் பரிசு ஜனாதிபதியிடம் விருது பெற்றார் அமைச்சர் கே.என். நேரு

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      இந்தியா
KN-Nehru 2022-10-02

Source: provided

புது டெல்லி ; உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தின் கீழ் 60 சதவீதம்  குறைவான குழாய் இணைப்புகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு, கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி வருவதற்கு தமிழக அரசு முதல் பரிசு பெற்றுள்ளது.  இதற்கான விருதினை நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கிட தமிழக அரசின் சார்பில் அமைச்சர்  கே.என்.நேரு பெற்றுக்கொண்டனர்.

அதை தொடர்ந்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு பின்வரும் கோரிக்கைகளை தெரிவித்து  நிதி ஓதுக்கீடு செய்யுமாறு கோரினார். அதன்படி, கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நீடித்த நிலைத் தன்மையை உறுதி செய்ய, காவிரி, கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்ள இடங்களின் அருகில் தடுப்பணைகள் கட்டுவதற்கு ரூ. 2,400 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களை சிறப்பாக பராமரித்து தானியங்கு முறையில் இயந்திரங்களை நிறுவி விரைவாக குடிநீர் வழங்குவதற்கு, ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  மழைக் காலங்களில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு, அதனை பயன்படுத்தி அருகில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்புவதற்கு திட்டங்கள் செயல்படுத்த, ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பொன்னையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து