முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணை அடிப்படையிலான வேலை சலுகையே தவிர, உரிமை அல்ல : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

திங்கட்கிழமை, 3 அக்டோபர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர உரிமை அல்ல என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. 

திடீரென்று ஒரு குடும்பத்துக்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவே குடும்பத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. கேரளத்தைச் சேர்ந்த திருவாங்கூர் உரங்கள், வேதிப்பொருள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ரத்து செய்துள்ளது.

எப்.சி.டி.எல். நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் 1995 ஏப்ரலில் பணியின்போது உயிரிழந்தார். ஊழியரின் மனைவி வேறொரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் கருணை அடிப்படையில் வேலை தரப்படவில்லை. ஊழியர் இறக்கும்போது அவரது மகள் சிறுமியாக இருந்துள்ளார். மகள் பெரியவரானதும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கில் எப்சிடிஎல் நிறுவன ஊழியர் இறந்து 24 ஆண்டுகளுக்கு பின் கருணை அடிப்படையில் வேலை கோருவதை ஏற்கமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. திடீரென்று ஒரு குடும்பத்துக்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவே கருணை அடிப்படையில் வேலை தரப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 

கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த திருவாங்கூர் உரங்கள், வேதிப்பொருள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்று ஐகோர்ட் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து