முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு : இரவு மற்றும் எல்லா காலத்திலும் தாக்கும் வல்லமை படைத்தது

திங்கட்கிழமை, 3 அக்டோபர் 2022      இந்தியா
Helicopter 2022-10-0

Source: provided

ஜோத்பூர் : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் இலகு ரக போர் ஹெலிகாப்டர் நேற்று விமானப்படையில் இணைக்கப்பட்டது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிட்டேட் இந்த இலகு ரக போர் விமானத்தை தயாரித்துள்ளது. இந்த விமானத்தை ஜோத்பூரில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்பணித்து வைத்தார் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இது 5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர். ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி தாக்குதல் நடத்தமுடியும்.

இந்த ஹெலிகாப்டர், உயரமான மலைப்பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலையிலும் இயங்கக்கூடியது. இரவு நேரத்திலும், காடுகளிலும் பயன்படுத்தலாம். மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம்.

இந்த ஹெலிகாப்டரில் பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தி ஏற்கனவே பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டர் நேற்று முறைப்படி சேர்க்கப்பட்டது. இதற்கான விழா ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில், இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

முக்கிய அம்சங்கள்:

* எதிரி நாட்டு வான்வெளி தாக்குதல்களை தடுக்கும் வகையில் இந்த இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்லன.

* 5.8 டன் எடை கொண்ட இந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* கிழே விழுந்தாலும் மிகக்குறைவான அளவில் மட்டுமே சேதம் ஏற்படும் வகையில் லேண்டிங் கியர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

* முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஹெச்.ஏ.எல் நிறுவனத்தால் இலகு ரக ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

* தேடுதல் பணி, மீட்புப்பணி, டேங்கர்கள் அழிப்பு, தரைப்படை தாக்குதல் என பல முக்கிய பணிகளை ஹெலிகாப்டர்கள் செய்ய திறன் உடையது.

* மணிக்கு 268 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து