முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய பூனை

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      உலகம்
World-Cat 2022--10-05

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்தவரின் செல்லப்பிராணி, உலகின் பெரிய பூனை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகின் மிக உயர்ந்த வீட்டுப் பூனை என்ற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது. 

அமெரிக்காவின் மிச்சிகன் நகரின் வசித்து வரும் பென் என்ற இளைஞர் பூனை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அவர் வளர்த்து வரும் பென்ரிர் என்ற பூனை உலகின் மிகப்பெரிய வீட்டுப் பூனை என்ற சாதனையைப் படைத்துள்ளது. 

சாவன்னா என்ற கலப்பின ரகத்தைச் சேர்ந்த இந்த பூனை உலகின் மிக உயரமான பூனை எனவும், பூனைகளுக்கான சர்வதேச சங்கம் இதனை அங்கீகரித்துள்ளது. இந்த பூனை 47.83 செ.மீ. (18.83 அங்குலம்) உயரம் கொண்டது. 

இதற்கு முன்பு இந்த பூனைக்கு முன்பு பிறந்த அர்குட்டுரஸ் எனப் பெயரிடப்பட்ட பூனை உலகின் மிக உயரமான பூனை என்ற சாதனையை படைத்திருந்தது. அர்குட்டுரஸ் 48.40 செ.மீ. (19.08 அங்குலம்) உயரம் கொண்டது.  இது குறித்து பூனையின் உரிமையாளரான பென் கூறுகையில், 

அர்குட்டுரஸ் பூனைக்கு வழங்கும் உணவையே பென்ரிருக்கும் வழங்கி வருகிறேன். பென்ரிருக்கு 2 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகிறது. ஆனால், அதன் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. எனினும் எனக்கு இது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. கின்னஸ் சாதனையை பென்ரிர் முறியடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து