முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வள்ளலாரின் முப்பெரும் விழா: ஆண்டு முழுவதும் அன்னதானம் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      தமிழகம்
CM-2 2022--10-05

Source: provided

சென்னை : சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று  வள்ளலார் முப்பெரும் விழாவினை  கொண்டாடுகின்ற வகையில் வள்ளலார் – 200 என்ற இலச்சினை, தபால் உறை மற்றும்  சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 5.10.1823 அன்று சிதம்பரம் அருகில் மருதூரில் பிறந்தார். ஆன்மீகவாதியான வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை நிறுவினார். மக்களின் பசியை போக்குவதற்காக வடலூரில் சத்திய தரும சாலையையும் நிறுவினார். சமத்துவம், கல்வி, தியானம் போன்றவற்றை மக்களிடம் பரப்பினார். திருவருட்பா, ஜீவகாருண்யம், அருள்நெறி போன்ற பல ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார். 

வள்ளலார் பிறந்த 200-வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும், அவர் தர்மசாலை தொடங்கிய 156-வது ஆண்டு கொண்டாடுகின்ற வகையிலும், அதே போல் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும் வள்ளலார் முப்பெரும் விழாவினை முதல்வர்  தொடங்கி வைத்து, வள்ளலார் தனிப்பெருங்கருணை சிறப்பு மலரை வெளியிட்டார். அதை தொடர்ந்து சுத்த சன்மார்க்கத்தினர் மழையூர் சதாசிவம், சிவராமன், தனலட்சுமி, பாலகிருஷ்ணன், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோருக்கு முதல்வர் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.  அதனைத் தொடர்ந்து, வள்ளலார் முப்பெரும் விழாவில், நேற்று (5.10.2022) முதல் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள்  கே.என். நேரு,  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வேலு, வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழுத் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து