முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு- காஷ்மீர் என்கவுன்ட்டர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      இந்தியா
Jammu-2022 09 28

Source: provided

ஜம்மு : காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து காஷ்மீர் கூடுதல் டிஜிபி கூறுகையில், "ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது.

அந்த தகவலை அடுத்து சோபியான் மாவட்டத்தின் ட்ராச் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் ஹனான் பின் யாக்கோப், ஜாம்ஷெட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இவர்கள் இருவரும் புல்வாமா காவல் நிலையத்தின் சிறப்பு அதிகாரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாவர். ட்ராச் பகுதியில் நடந்த என்கவுன்ட்டர் தொடர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து