முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்..!

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      இந்தியா
Drugs 2022-10-06

Source: provided

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து கத்தார் வழியாக மும்பைக்கு பயணித்த பயணி ஒருவர் மும்பைக்கு போதைப்பொருள் கடத்திவருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நபரின் உடமைகளை சோதனை செய்ததில், அவரிடம் இருந்து 16 கிலோ ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கைப்பற்றி, கானா நாட்டைச் சேர்ந்த பயணி மற்றும் பெண்ணை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வழக்கின்தொடர்பாக டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கானா நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டார். அப்பெண் கடத்தப்பட்ட போதை பொருட்களை டெல்லியில் டெலிவரி செய்யவிருந்தார். பயணியிடம் இருந்து 16 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.100 கோடிக்கும் அதிகமாகும் என்றும், பயணி கைது செய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தன்ர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து