முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த தலைமை நீதிபதி யார்? - பரிந்துரையை அனுப்புமாறு சுப்ரீம் கோர்ட் : தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு கடிதம்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யு.யு. லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்தது அப்பதவியில் அமரப் போகும் நபரை பரிந்துரைக்குமாறு அவருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித், 1983-ல் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். 1985 வரை பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்காடி வந்த அவர், 1986 ஜனவரியில் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். 2004-ல் மூத்த வழக்கறிஞராக சுப்ரீம் கோர்ட்த்தால் அறிவிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி ஆனார். 

இந்நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்த்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். ஆகஸ்ட் 27 தொடங்கி 74 நாட்களுக்கு மட்டுமே அவர் பதவிக்காலம் நீடிக்கும் என்பதால் அடுத்த பரிந்துரை கோரி அவருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்த்தின் அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரை வெளியாகிவிட்டால், நடைமுறையின்படி நீதிபதிகளைத் தேர்வு செய்யும் சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் கூடத் தேவையில்லை. சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக அடுத்து பொறுப்பேற்கும் நபரை பரிந்துரைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து