முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் புதிய கல்விக்கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் : கவர்னர் தமிழிசை திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2022      இந்தியா
Tamilsai 2022--10-07

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இந்திய விண்வெளி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெற்ற கண்காட்சியை புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:- விவசாயிகாளும், அரசாங்கமும் காலத்திற்கு ஏற்ற பயிர் செய்யும் முறைக்கு விஞ்ஞானிகளின் ஆலோசனையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மாநில பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இதனை ஒருங்கிணைக்கவே சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தரமான கல்வி குழந்தைகளுக்கு கிடைக்கும்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் வட இந்தியர் ஆதிக்கம் வரும் என்று தெரிவிப்பது தவறான கருத்து. புதுச்சேரியில் கண்டிப்பாக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். ஏழை மாணவர்களுக்கான கல்வித்தரத்தை உயர்த்த கூடாது என சில அரசியல்வாதிகள் நினைக்கின்றனர்.

இந்தியை திணிப்பதாகவும், குலக்கல்வியை திணிப்பதாகவும் ஒரு சில தலைவர்கள் கூறுகின்றனர். அவர்கள் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக படிக்க வேண்டும் அனைத்தையும் அரசியலாக வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து