முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபர் மாத இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் - 3 மூலம் 36 செயற்கைக்கோள் ஏவப்படும் : இஸ்ரோ தகவல்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2022      இந்தியா
Isro 2022--10-07

Source: provided

சென்னை : ‘ஒன்வெப்’ நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்கள், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் இம்மாத இறுதியில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அதிகபட்சம் 1,750 கிலோ வரை மட்டுமே செயற்கைக் கோள்களை ஏவ முடியும். ஆனால், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் 4 ஆயிரம் கிலோ வரை விண்ணில் செலுத்த முடியும். இதையடுத்து, இங்கிலாந்தின் ‘ஒன்வெப்’ நிறுவன செயற்கைக் கோள்களை ஜி.எஸ்.எல்.வி. மூலம் ஏவுவதற்காக 2 ராக்கெட் ஏவுதல் திட்டங்களுக்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக் கோள்கள் இந்த மாத இறுதியில் ஏவப்பட உள்ளன.

இதற்கான ‘ஒன்வெப்’ நிறுவன செயற்கைக் கோள்கள் ஏற்கெனவே ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்து சேர்ந்துவிட்டன. தற்போது ராக்கெட் பாகங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 2-வது கட்டமாக ‘ஒன்வெப்’ நிறுவனத்தின் செயற்கைக் கோள் 2023 ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து