முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் மேலும் 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்குவதற்கு தடை நீட்டிப்பு : அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2022      இந்தியா
Engineering-Colleges 2022--

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை 2024 ஆம் ஆண்டு வரை ஏ.ஐ.சி.டி.இ நீட்டித்துள்ளது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் சார்ந்த புதிய பாடப்பிரிவுகள் மட்டும் தொடங்க அனுமதி அளித்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

A.I, MACHINE LEARNING உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 2024 வரை ஏ.ஐ.சி.டி.இ அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்த நிலையில், மாணவர் சேர்க்கை குறைவால் தற்போது 443 கல்லூரிகள் உள்ளன.

2018ம் ஆண்டு ஐ.ஐ.டி. தலைவர் பி.வி.ஆர்.மோகன்ரெட்டி தலைமையிலான அமைக்கப்பட்ட குழு பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்னைகளால் 2022 ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை விதித்தது. இந்நிலையில் அதே நிலை தொடர்வதால் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை 2024 ஆம் ஆண்டு வரை ஏ.ஐ.சி.டி.இ நீட்டித்துள்ளது.

எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து