முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2022      இந்தியா
modi-2022-09-01 (2)

மகராஷ்டிரா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் இழப்பீடும் அறிவித்துள்ளார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் நேற்று அதிகாலை பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், பேருந்து தீப்பிடித்ததில் அதிலிருந்த பயணிகள் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் இழப்பீடும் அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த விபத்து வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

தொடர்ந்து, விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நாசிக்கில் நடந்த பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து