முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே பணிநியமன ஊழல் புகார்: லாலு பிரசாத் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2022      இந்தியா
Lalu-Prasad 2022--10-08

Source: provided

புதுடெல்லி : 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான அரசில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் மீதான பணி மோசடி வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததுள்ளது.

2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில், 2009-ம் ஆண்டு வரை பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக பணியாற்றினார். அப்போது, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதற்காக லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து, லாலுவின் மனைவி ராப்ரி தேதி, தற்போது பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக உள்ள லாலுவின் மகன் தேஜஸ்வி, இரு மகள்கள் மற்றும் இவர்கள் மூலம் ரயில்வேயில் வேலை பெற்ற 12 பேர் மீது மே 18 அன்று இந்த சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.

சிபிஜ தாக்கல் செய்த அறிக்கையில் , ‘வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் குடும்பங்களுக்குச் சொந்தமான 1 லட்சம் சதுர அடி நிலம் லாலு பிரசாதின் குடும்பத்திற்கு வேலைக்காக மாற்றப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வேயில் குரூப் டி பதவிகளுக்கு விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் அவர்கள் ரயில்வே அதிகாரிகளால் அழைக்கப்பட்டு தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுவர். இதன் பின்னர் வேலை பெற்ற நபர்களோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தங்கள் நிலத்தை லாலுவின் மனைவி, மகன்,மகள்களின் பெரியரில் பத்திரப்பதிவு செய்து மாற்றிய பின்னர் அவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்பட்டதாகவும் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை ஆய்வு செய்ததின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேருக்கு எதிராகவும் சிபிஐ டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ வழக்குகள் மற்றும் லாலு குடும்பத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் மத்திய பாஜக அரசின் சதிச் செயல் என ராஷ்டிரிய ஜனதா தள கடுமையாக விமர்சித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து