முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு : பிரதமர் மோடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2022      இந்தியா
Modi 2022--10-09

Source: provided

புதுடெல்லி : மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கந்தாட குடி திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கந்தாட குடி திரைப்படக் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் தனது 46-வது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இந்த நிலையில், அவர் நடிப்பில் உருவாகிய கந்தாட குடி என்ற திரைப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. 

இப்படத்தின் டிரைய்லரை பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரில் சேர்ந்து நடிகர் புனித் ராஜ்குமார் பகிர்ந்து கொள்ள விரும்பினார் என்று புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  மேலும் பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து நடிகர் புனித் ராஜ்குமார் இருக்கும் படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில், கந்தாட குடி திரைப்படக் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் அப்பு (நடிகர் புனித் ராஜ்குமார் ) வாழ்கிறார். அவர் புத்திசாலித்தனமான ஆளுமை, ஆற்றல் நிறைந்தவர் மற்றும் அவர் ஒப்பற்ற திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

காந்தடா குடி என்பது இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான காணிக்கையாகும்.இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து